புதுச்சேரியில் 10 -ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..
புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
புதுவையில் வரும் 2025-ஆம் ஆண்டு மாா்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வுகளுக்கு தகுதியான தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் நாளை முதல் டிச.17-ஆம் தேதி வரையில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பதாரா்கள் அவா்களுக்கான விதிமுறை, அறிவுரைகளையும், தோ்வுகள் பட்டியலையும் கல்வித் துறை இணையத்தில் அறிந்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments