Breaking News

நீர்வளத்துறை அதிகாரிகள் , மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.

 


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் ஆற்றில் செல்லும் வெள்ளம் தொடர்ந்து நுரை பொங்கி வருகிறது.

 இதனைத் தொடர்ந்து இன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் , நீர்வள துறை அதிகாரிகள் ஜேசிபி கொண்டு ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அனுமதி இல்லாமல் ஆற்றில் நுரை பொங்கும் இடத்தில் அதிகாரிகள் சுத்தம் செய்ய முயற்சி செய்தபோது அதிகாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்

No comments

Copying is disabled on this page!