அரசு அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அதுவரை இத்திட்டத்தில் உள்ள முறையீடுகளை யுனைடெட் இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்வரின் மௌனத்தை கலைத்திட வேண்டிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments