Breaking News

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் குடியரசு மணி கைது செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உளுந்தூர்பேட்டை காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உளுந்தூர்பேட்டை.காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன் சிறப்பு உரையாற்றினார் தொடர்ந்து இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி ஆனந்தன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூவராகவன் செந்தில் அலமேலு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

No comments

Copying is disabled on this page!