எலவனாசர்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் முன்பு மார்த்திஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அசாருதீன் என்ற இளைஞர் மரணத்திற்க்கு காரணமாணவர்களை தர்க்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்யவும்,குற்றவாளிகளுக்கு துணை போகும் எலவனாசூர்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒன்றியத் தலைவர் வி.ரகுராமன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஷேக் இர்ஃபான் என்கின்ற அசாருதீன் 24 இளைஞரின் மரணத்திற்க்கு காரணமான அலமேலு, சரண்யா, சபருன்னிசா, நடராஜன் ஆகியோரை,இளைஞரின் தற்க்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதலின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யாமல் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு துணை போகும் எலவனாசூர்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் ,காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை மிரட்டுவது புகார் கொடுக்க வந்தவர்களின் மீது வழக்குப்பதிவேன் எனும் அதிகார தோரணையோடு பேசுவது குற்றவாளிகளுக்கு சாதகமாக வழக்குகளை பதிவு செய்வது போன்றவற்றை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கண்டன உரையாற்றினார்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி, டி.பச்சையப்பன், ஆர்.செல்வராஜ், அஞ்சலை, என்.கோவிந்தன், ஆர்.ராஜகோபால், கே.செம்மலை, ஆர்.ரங்கதுரை, எஸ்.மாறன், எம்.முகமதுரபிக,கிளை செயலாளர்கள் ஜே.இம்ரான், எம்.கண்ணன்,பி.சிவசங்கரி,பி.முனியன்,எம்.அர்ஜுனன்,எம்.முகமதுரபீக் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,
No comments