Breaking News

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

 


சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பாரத வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.எம். ஜுபைர் தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாஷித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் தைக்கால் ஐ.முபாரக் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் அமித்ஷாவுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில, செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட, மாநில, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், ஜமாத் தலைவர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

No comments

Copying is disabled on this page!