Breaking News

மின்துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

 


புதுச்சேரி அரசு மின்துறையில் இளநிலை மற்றும் உதவி பொறியாளர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் மின் துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் கௌசிகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் ஆனந்த்,மாநில செயலாளர் சஞ்சய் சேகரன் ,மாநில பொருளாளர் ரஞ்சித் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மின் துறை நடவடிக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


ஓய்வு பெற்றவர்களுக்கு பணி வழங்குவதை நிறுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!