உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மூன்று வாரங்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம்..?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனம் நான்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு வருகின்றனர். மூன்று கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளூர் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு கட்டண விளக்கு அழிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் அதனை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்க மறுத்து வந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி காலை உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் தங்க ரமேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர் அதை கண்டித்து 19ஆம் தேதி முதல் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்தும் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நீதிமன்ற பணிகள் 3-வது வாரமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டது.
No comments