நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் திறந்தவெளியில் கழிவு நீர் கொட்டி சென்ற தனியார் கழிவு நீர்வாகனத்தை சிறைப்பிடிப்பு..
சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இங்கு 24 வார்டுகளிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியில் ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனிடையே நகராட்சி மூலம் டோக்கன் பெற்று தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் மூலம் கொண்டுவரப்படும் கழிவு நீர் ஊற்றப்பட்டு வந்தது. தற்போது சீர்காழி நகராட்சியில் சொந்தமாக கழிவுநீர் வாகனம் வாங்கிய நிலையில் தனியார் வாகனங்கள் ளுக்கு கழின நீர் கொட்ட ரசீது தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நகராட்சி குப்பை கிடங்கில் தனியார் கழிவு நீர் வாகனம் கழிவு நீரை திறந்த வெளியில் கொட்டி அவை அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. கழிவு நீர் கொட்டி செல்வதை அறிந்த அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, அதிமுக நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட அதிமுகவினர்கள் கழிவு நீர் வாகனத்தை சிறை பிடித்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது கடந்த நவம்பர் மாதம் மற்றும் 10 தினங்கள் முன்பு தேதியிட்ட நகராட்சி ரசீதுகளி காட்டியுள்ளதாகவும் நகராட்சியிடம் அனுமதி பெறாமல் இவ்வாறு திறந்த வெளியில் கழிவுநீர் கொட்டப்படுவது குறித்து வாக்குவாதம் செய்தனர். இது குறித்து நகராட்சி பொறியாளர் கிருபாகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தனியார் கழிவு நீர் வாகனங்கள் இவ்வாறு திறந்தவெளியில் கழிவு நீர் கொட்டுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்கள் கலைந்து சென்றனர்.
No comments