Breaking News

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமானநிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வரவேண்டும்.!!

 


தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துவர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் சந்தித்து மனு அளித்தார். அதில், பிரதமர் நரேந்திரமோடி ஆணைக்கிணங்க ரூ. 381 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி தூத்துக்குடிக்கு வருகைதர அழைப்பு விடுக்க வேண்டும், மேலும் தூத்துக்குடியில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு நேரடி விமான சேவை துவங்கவும் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனை பெற்றுக் கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

அப்போது, பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, வர்த்தகபிரிவு மாநில தலைவர் ராஜாகண்ணன், மகளிர் அணி மாநில செயலாளர் நெல்லையம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!