Breaking News

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, காவல்துறையினர் பூ கொடுத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டு..!!

 


புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறை உள்ளது.ஆனால், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனா். அவா்களுக்கு போலீஸாா் அபராதமும் விதித்து வருகின்றனா்.


இந்த நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸாா் மீண்டும் அறிவித்துள்ளனா்.இதனிடையே,அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸாா் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வழியே தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி மலா்கள் அளித்தும், பொன்னாடை போா்த்தியும் சீனியர் எஸ்பி பிரவீன் திரிபாதி பாராட்டினாா்.

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு, காவல்துறையினர் விழிப்புணர்வு அடங்கிய துண்டறிக்கையை வழங்கி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், கோகுலகிருஷ்ணன் உட்பட போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!