அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்ச கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி எம்.டி.எஸ்., ஊழியரை போலீசார் கைது..
புதுச்சேரி உழவர்கரை விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா.
மூலக்குளம் ஜான்சி நகர், லுாயிஸ் செட்டியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி எம்.டி.எஸ். ஊழியர் அருள், 44; என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 1 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ரெட்டியார்பாளையம் போலீசில் வெண்ணிலா புகார் அளித்தார்.
போலீசார் அருள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இன்று கீர்த்தி, பழனி ஆகியோரும் தங்களிடமும் அரசு வேரை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அருள் மீது கடந்த 10 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், கோரிமேடு, உருளையன்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில், அரசு வேலை வாங்கி தருதவாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக பலர் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளனர். தற்போது அருள் கைதாகி இருப்பதால், மற்ற புகார்களும் இந்த வழக்குடன் சேர்க்கப்பட உள்ளது.
No comments