மோட்டார் சைக்கிள் திருடிய தமிழக வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்..
புதுச்சேரி திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு மதகடிப்பட்டு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே பைக்கில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில்,அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்,விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செந்தமிழ் செல்வன்(26) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதகடிப்பட்டு ரீகன் ஒயின்ஸ் அருகில் திருடியதையும், 2;மாதங்களுக்கு முன்பு ஒரு பைக் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தமிழ் செல்வனை கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்து புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments