Breaking News

பைக் திருடடிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

 


புதுச்சேரி வேல்ராம்பட் ஏரிக்கரை அருகே முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலாயான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியில் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 


அவர்கள், வில்லியனுார், தட்டாஞ்சாவடி மோகன் பிரசாத், 18; கோபாலன் கடை சே ஷாத்ரி, 19; வி.மணவெளி நீலமணிகண்டன், 20; என்பதும் மூவரும் ஓட்டி வந்தது திருட்டு பைக் என, தெரிய வந்தது.விசாரணையில் மூவரும் மேலும் 2 இடங்களில் திருடி மறைத்து வைத்திருந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


இதபோல, உருளையன்பேட்டை போலீசார் நேற்று மாலை மறைமலை அடிகள் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகப்படும்படி வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.அவர், கடலுார் மாவட்டம், மாளிகைமேடு, அரவிந்த், 25; என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.


அரவிந்த் புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 14 பைக்குகளை திருடியதை ஒப்பு கொண்டார்.அரவிந்தை கைது செய்த போலீசார் முதற்கட்டமாக 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!