கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்..
புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட மகாதமா நகர் சந்திப்பு அருகே மர்ம நபர்கள் அப்பகுதி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைத்த சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரவிக்காந்த ஜான் மேரி (எ) பரத் (21) மற்றும் ரோடியர்பேட் பகுதியை சேர்ந்த சக்திவேல் (20) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 கிராம் கஞ்சா, 2 செல்போன் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments