புதுச்சேரியில் 3 பேரிடம் 1.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மூலக்குளத்தை சேர்ந்தவர் அரவிந்தன். இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, பல்வேறு தவணைகளில் மொத்தமாக 90 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அந்த நபர் கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்தார்.
அவர் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமலும், மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. மேலும், புதுசாரத்தை சேர்ந்த ரூபலிங்கம், ஆன்லைன் மூலம் பணம் வாங்கி அதை, வட்டியுடன் கட்டியுள்ளார். இவரை தொடர்பு கொண்ட நபர், வாங்கி கடனுக்கு மேலும், கூடுதல் பணம் கட்ட வேண்டும். இல்லை எனில், மார்பிங் செய்த புகைப்படத்தை வெளியில் விடுவதாக மிட்டினார். அதற்கு பயந்து, 68 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
தொடர்ந்து, கோரிமேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம கும்பலிடம் ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.
No comments