வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியோர் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா சமூக நீதிப் பேசுவதற்கு திமுக அரசு எந்த தகுதியும் இல்லை என கைகளில் பதாகைகளில் 10.5% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
பு.லோகேஷ்.
No comments