உளுந்தூர்பேட்டையில் சுங்க கட்டணம் செலுத்தாத அரசு பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து பாஸ்ட் ட்ராக் உரிய தொகை இல்லாததால் கட்டணம் செலுத்தாமல் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டணம் செலுத்தாமல் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் எரிச்சல் அடைந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு மாற்றுப் பேருந்து வரவழைத்து அனுப்புமாறு தகராறுகள் ஈடுபட்டதால் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.உரிய பயணகட்டணம் செலுத்தி தாங்கள் பயணம் செய்த பொழுதும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் பேருந்து இயக்கும் நடவடிக்கையால் பயணிகளிடையே காலதாமதம் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments