Breaking News

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார்கோவில் மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டு:-


 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் உள்ள தாமரை சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவர் கே. ஆர். செல்வராம் மற்றும் அதே பள்ளியை சேர்ந்த கே. ஆர். கலைராம்  ஆகியோர் கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில் டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் மன எண் கணித போட்டி (யுனிவர்சல் கான்செப்ட் ஆஃப் மென்டல் அரித்மெடிக் சிஸ்டம்) சர்வதேச அளவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில், கலந்து கொண்ட செம்பனார்கோவில் தாமரை சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கே. ஆர். செல்வராம் மற்றும் கே. ஆர். கலைராம் இவர்கள் பங்கேற்று இதில் "A" பிரிவில் கே. ஆர். செல்வராம் மூன்றாவது இடத்தையும் "B" பிரிவில் கே. ஆர். கலைராம் மூன்றாவது இடத்தையும் பிடித்து சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

 இந்நிலையில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட இருவரையும் பள்ளி நிர்வாகம் சார்பில் கலைமகள் கல்வி குழுமம்  நிர்வாக இயக்குனர் என். எஸ். குடியரசு, இரு மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியை மோகன செல்வி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.


No comments

Copying is disabled on this page!