சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல்..
புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி 80 ஆண்டுகளாக அப்பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என இரண்டு வகுப்புகள் மட்டுமே நடந்து வந்த நிலையில் 15 மாணவர்கள் மட்டுமேஆ இப்பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் பள்ளியில் இருந்த மாணவர்களை அருகாமையில் இருக்கக்கூடிய மனவெளி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதனை தொடர்ந்து மாணவர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக சின்ன வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பள்ளி இதே இடத்தில் இயங்க வேண்டும் என்றும் சுயநலத்திற்காக இப்பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது என்று தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியை இடித்துவிட்டு மதுபான கடையை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments