Breaking News

ஒன்றியக்குழு தலைவர் வசுமதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய கூட்டம்..

 


தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு கூட்டத்தில் இதுவரை ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒன்றியக்குழு தலைவர் வசுமதி உரையாற்றினார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி மற்றும் சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோட் மகாராஜா, பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமாலை, ஆனந்தி, அந்தோணி தனுஷ்பாலன், முத்துலட்சுமி, செல்வபாரதி உள்பட உறுப்பினர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட ஊராட்சி பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்தும் மற்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலளித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதுவரை ஒத்துழைத்த ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

கூட்டத்தில், அய்யன்நடப்பு ஊராட்சி கிழக்கு தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், கோரம்பள்ளம் ஊராட்சி பிஎஸ்பி நகரில் பேவர் பிளாக் அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மெயின் ரோட்டில் பகுதி காமராஜ் நகர் வரை இணைப்பு தார்சாலை அமைத்தல், சவேரியார்புரம் கிழக்கு பேவர்பிளாக் சாலை அமைத்தல், ராஜபாளையம் மெயின் சாலையில் நவீன பஸ் நிறுத்தம் அமைத்தல், பாலதண்டாயுதம் தெருவில் அடிபம்பு அமைத்தல், ராஜபாளையம் கடற்கரை தார்சாலை அமைத்தல், பாண்டியாபுரத்தில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைத்தல், பழுதடைந்த சத்துணவு கூடம் சீரமைத்தல், முடிவைதானேந்தல் ஊராட்சி பள்ளிக்கூடம் மெயின்ரோட்டில் தார்சாலை அமைத்தல், வர்த்தகரெட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம், மகிழ்புரம் மற்றும் வர்த்தகரெட்டிபட்டி பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி மங்களகிரி கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை, பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகி ஊராட்சி ஞானசிகாமணிநகரில் பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், இளநிலை பொறியாளர் பிரான்சிகா சங்கரேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் சாந்தி, சத்துணவு திட்ட மேலாளர் செல்லப்பாண்டியன் உள்பட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!