தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்ராம்பட்டு நெய்வனை இடையே சேஷநதியில் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் அதன் அருகில் பொதுமக்கள் நதியை கடந்து செல்ல தற்காலிக தரை பாலம் அமைக்கப்பட்டது இந்த நிலையில்
புயல் காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
இதன் காரணமாக சேஷாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைபாலம் உடைந்து மழைநீர் அடித்துச் செல்லப்பட்டது
இதனால் நெய்வனை ஆதனூர் குன்னத்தூர் கிளியூர் தேங்குணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்க பட்டுள்ளது மழைக்காலங்கள் என்பதால் உடல் பாதிப்பு ஈடுபட்டால் மருத்துவமனைக்கு பல கிலோமீட்டர் தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடைந்த தற்காலிக தரைப் பாலத்தை உடனடியாக
சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப் பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
No comments