Breaking News

இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் இவர் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகின்றார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த கோகுல் தனது இரு சக்கர வாகனத்தில் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் என்பவரை ஏற்றிக்கொண்டு பாதூர் காந்தி நகர் பகுதியில் இருந்து செங்குறிச்சி சுங்கச்சாவடியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு அதிவேகமாக கோகுல் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கோகுல் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் ரோஹித் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!