முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா எட்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். சீர்காழி நகர பொறுப்பாளர் பாலமுருகன் வரவேற்பு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி, சந்திரமோகன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த் நடராஜன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நகரத்தினம், மண்டல நிர்வாகி சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேர்கள் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல் சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments