Breaking News

சித்தர் பீடத்தில் 2025 வருட பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம்..

 


சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 2025 - ஆம் வருட பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மறைந்த நாடி ராஜேந்திரா சுவாமிகளால் நிர்மானிக்கப்பட்ட ஓளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இங்கு வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் 2025- புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உலக நன்மை, விவசாயம் செழிக்க வேண்டி 18 சித்தர்கள் ஒளிலாயத்தில் சிறப்பு யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகள் கொண்டும் 60 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட பரிவார பூஜைகளுடன் மகா யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும் சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் செய்யபட்டது.இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.ஏற்பாடுகளை நாடி . செல்வமுத்துக்குமரன், நாடி.செந்தமிழன் மாமல்லன், பரதன் ஆகியோர் செய்திருந்தனர்

No comments

Copying is disabled on this page!