காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி,அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சோனியா காந்தியின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் மற்றும் அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து அரியாங்குப்பம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி,தெற்கு மாவட்ட தலைவர் குருமூர்த்தி , கிருஷ்ணமூர்த்தி, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சசிகுமார் ,மகளீர் காங்கிரஸ் துணைத் தலைவி பொன்னி சுப்புராயன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments