அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு கவர்னர், முதலமைச்சர், சபாநாயகர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை..
சட்ட மாமேதை' டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம்,ஜெயக்குமார்,சரவணன் குமார்,சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு , சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன்,அசோக்பாபு,பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி,கல்யாணசுந்தரம்,லட்சுமிகாந்தன்,பிரகாஷ் குமார், ரமேஷ் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள 'சட்ட மாமேதை' டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ்,திமுக, அதிமுக,பாஜக,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments