2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருந்த பழைய இரும்பு மற்றும் மரப் பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 63 நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் அவதரித்த திருநாவலூரில் 2000 ஆண்டுகள் பழமையான பக்தஜனேஸ்வரர் கோவில் உள்ளது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒரு ஆண்டுகளாக புனரமைப்பு பணி நடைபெற்று கடந்த மாதம் 21 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
இந்தக் கோயிலின் புணரமைப்பு பணியின் போது எடுக்கப்பட்ட பழைய இரும்புகள் மற்றும் மரப் பொருட்களை அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டன பல லட்சம் ரூபாய் கொண்ட இரும்பு மற்றும் மரப் பொருட்களை இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் டிராக்டர் மூலம் ஏற்றி சென்று உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு இரும்பு கடைக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது இரண்டாவது முறையாக டிராக்டர் மூலம் பழைய பொருட்களை ஏத்திக்கொண்டு இருந்தனர்
அப்போது இதைப்பற்றி அறிந்த கிராம மக்கள் இரும்பு மற்றும் மர பொருட்கள் ஏத்திய டிராக்டரை தடுத்து நிறுத்தி பல லட்சம் ரூபாய் கொண்ட இந்த பழைய இரும்பு மற்றும் மரப் பொருட்களை எவ்வித அறிவிப்பும் இன்றி இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக திருநாவலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர் புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேகம் நடந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் புறனமைப்பு போது எடுக்கப்பட்ட பழைய இரும்பு பொருட்கள் மற்றும் மரப் பொருட்களை டிராக்டரில் எடுத்துச் செல்லும் போது கிராம மக்கள் தடுத்து நிறுத்தி இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments