இரண்டு நாட்களாக குளத்தில் தேடும் பணி தீவிரம் அதிகாரிகள் ஆய்வு..
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள திருகுளத்தில் இளம் பெண் குதித்ததை பார்த்ததாக சிறுவன் கூறியதன் பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு துறை மீட்பு படையினர் இரண்டாவது நாளாக மேற்கொண்ட தேடுதல் பணி மழையின் காரணமாக தொய்வு:- சம்பவ இடத்தில் ஆர்டிஓ நேரில் ஆய்வு:-
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு ராஜகோபுரம் உள்ளே சென்றவுடன் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் நேற்று மாலை 6:30 மணி அளவில் சிகப்பு கலர் சுடிதார் அணிந்த இளம் பெண் ஒருவர் குதித்ததாக அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பார்த்துவிட்டு கூச்சலிட்டதை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் குளத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 8 பேர் அடங்கிய குழுவினர் குளத்தில் மாயமானதாக கூறப்படும் பெண்ணை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பெண் குளத்தில் தவறி விழுந்தாரா, குளத்தில் குதித்து தற்கொலை முயற்சித்துள்ளாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை 8 மணி அளவில் மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி நடத்தி வருகின்றனர். தேடுதல் பணியில் கனமழையின் காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ஆர் டி ஓ விஷ்ணுபிரியா வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய சிறுவனை வரவழைத்து அவரிடம் விசாரித்தனர். இச்சம்பவத்தால் அங்கு இரண்டு நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. மயிலாடுதுறையில் ரெண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் கோயில் ராஜகோபுரம் முகப்பில் தண்ணீர் தேங்கியது.
No comments