வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்..
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், முதன்மைச் செயலாளரும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருமான பிரகாஷ் தலைமை வகித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments