புத்தாண்டு பிறப்பதற்குள் உயிர்காக்கும் காவலர்களை நியமித்து, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை..
இது தொடர்பாக அவர் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
புதுச்சேரி கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் பலியாகி கொண்டிருக்கின்றனர்.
இதுபற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக கடலில் இறங்குவோரை தடுக்கும் விதமாக உயிர் காக்கும் காவலர் பணிக்கு 34 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆக., 7ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக பணி ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு பணிகள் தராமல் சம்பந்தப்பட்ட துறையினர் அலைகழித்து வருகின்றனர்.
புத்தாண்டு பிறப்பதற்குள் கடலோர பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிர் காக்கும் காவலர்களை பணி அமர்த்தி, சுற்றுலா பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments