பெருந்தலைவர் காமராஜர் பட்டப் படிப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா..
தேசிய நுகர்வோர் தினம் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பட்டப் படிப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N. திருமுருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மேலும் இவ்விழாவில் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பு FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY பொறுப்பாளருக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் சச்சிதானந்தம் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர் FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY மாநிலத் தலைவர் வழக்கறிஞர்& நோட்டரி S.திருமுருகன், மாநில செயலாளர்,S.சிவக்குமார் மாவட்ட செயலாளர் ராஜதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி துணைத் தலைவி தெய்வானை மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments