கோவில் நில மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மோசடி செய்த வழக்கில் கோவில் நிலத்தை மனைகளாக விற்க இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன்,மனைகள் விற்பனையில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ஜேசிபி ஆனந்தின் மேலாளர் திருமலை,ஆவனங்கள் தயாரிப்பில் முக்கிய குற்றவாளியான நில அளவையர் ரேணுகா தேவி,பத்திர எழுத்தர் கார்த்தி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமினில் வெளிவந்த நில அளவையர் ரேணுகாதேவியின் கணவர் குரு என்பவரை நேற்று நகர காவல் நிலைய போலீசார் நேற்று மாலை கைது செய்து அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு பேருந்து மற்றும் சுற்றுலா வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கோவில் நில மோசடியில் முக்கிய குற்றவாளியான தலைமுறைவாக இருந்த ஜேசிபி ஆனந்த் இன்று காலை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் முதலாம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு சரணடைந்தார்.சரண் அடைந்த ஜேசிபி ஆனந்திற்கு மருத்துவ பரிசோதனை தொடர்ந்து காரைக்கால் தனி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
No comments