நாம் தமிழர் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் விலகி அதிமுகவில் இணைவு.
சீர்காழி ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் வினோத் ராஜ் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் உட்பட 50க்கு மேற்பட்டவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி வரவேற்றார். , ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,அவைத்தலைவர் கல்யாணசுந்தரம்,நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி,நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் லெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். இதில் அதிமுக நிர்வாகிகள் பக்கிரிசாமி, செல்வமணி, தெட்சிணாமூர்த்தி, ராஜதுரை, ராஜசேகர்,மோகன், மலையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments