மழை வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் மூழ்கி பழுதானது. இத்தகைய கார்களை 'ஸ்டார்ட்' செய்ய கூடாது..?
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மழைநீரில் தத்தளித்து வருகிறது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், ஜீவா நகர் பகுதி என நகர பகுதி முழுதும் 4 முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் மிதந்தது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்வது எப்படி என கார் ஷோரும் டீலர்கள் கூறியதாவது;
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை முதலில் ஸ்டார்ட் செய்ய கூடாது. மழைநீர் வடிந்த பின்பு டீலர்களுக்கு போன் செய்தால், கார்களை டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வர். அவசரப்பட்டு கார் ஸ்டார்ட் செய்தால், கார் எஞ்சினில் தண்ணீர் புகுந்து பழுதாகி விடும்.காரின் டயரில் பாதி வரை அல்லது சைலன்சர் வரை தண்ணீர் இருந்தாலே ஸ்டார்ட் செய்ய கூடாது.
பெரும்பலான கார்களுக்கு மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டால் பழுது சரிசெய்து கொள்ள காப்பீடு செய்துள்ளனர். இதனால் காப்பீடு மூலம் பழுதுகளை சரிசெய்து கொள்ளலாம். ஆனால் ஸ்டார்ட் செய்து எஞ்சினை பழுது ஆக்கிவிட கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.
No comments