மழையின் காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள் 1000 ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் நீரில் மூழ்கியது..
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவில் விட்டுவிட்டு கனமழையானது கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அனந்தமங்கலம், திருக்கடையூர், டி மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேலாக விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது இதனால் விளைநிலங்கள் கடல் போல் காட்சி அளிக்கிறது பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . தொடர்ந்து தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
No comments