Breaking News

அமைச்சர் மெய்ய நாதன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டாரம் மூவலூர் ஊராட்சிக்குட்பட்ட மகாதானபுரம் பள்ளிக்கூடத் தெருவில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி அருகில் இருந்த 100 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் கனமழையினால் இன்று காலை வேரோடு சாய்ந்து அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் விழுந்துள்ளதை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2 நாட்களாக 14 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362, திருமண மண்டபம்-146, சமுதாய கூடம்-68 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 362 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருக்கின்றது. மழையினால் பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தவும், மக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கவும், குறிப்பாக இந்த கனமழை காரணமாக தற்போது விவசாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கான உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு (5) வட்டாரத்திலும் சுகாதார தேவைகளுக்கு rapid response team ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 108 ஆம்புன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் மற்றும் மழையின் போது நாய் கடி மற்றும் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை, சேதம் தொடர்பான புகார்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இன்று, மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 559.68 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு மருத்துவமனை கூடுதல் கட்டடங்களையும் ஆய்வு செய்யப்பட்டது. அது மிக விரைவில் திறப்பு விழா காணப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணிக்கப்பங்கு, திருமுல்லைவாசல், பூம்புகார், தொடுவாய், நண்டலாறு போன்ற பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் கடல் அரிப்பு அதிகம் ஏற்படும் பகுதி என்று ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

 இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமர், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!