தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி ஆதிபராசக்திநகரில் மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 12, 13, 14 தேதிகளில் பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனை அகற்றும் பணியில் கடந்த 4 நாட்களாக மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆதிபராசக்தி நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற ஏதுவாக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களின் மூலம் எட்டயபுரம் சாலை பகுதியில் வழித்தடம் ஏற்படுத்தி, மழைநீரை வெளியேற்றும் பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்தினார்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments