தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு..
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 18ஆவது வார்டுக்குட்பட்ட மில்லர்புரம் வீட்டுவசதி வாரியப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் பொன்னுசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர் மற்றும் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments