மறவன்மடம் பரி.பவுலின் ஆலய ஊழியர் இல்லத்திறப்பு விழா..
மறவன்மடம் சேகரம் பரி. பவுலின் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட ஊழியர் இல்லத்தை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் திறந்து வைத்தார்.
சிஎஸ்ஐ தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட மறவன்மடம் சேகரம் பரி.பவுலின் ஆலய வளாகத்தில் உள்ள சபை ஊழியர் இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவிற்கு திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் தலைமை வகித்து ஜெபித்தார். லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உபதலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் டேவிட்ராஜ் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி வைத்தனர். திருமண்டல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளரும், தமிழ்நாடு கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினருமான பிரேம்குமார் ராஜாசிங் புதுப்பிக்கப்பட்ட ஊழியர் இல்லத்தை திறந்து வைத்தார். இதில், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயரட்சகர், குருவானவர்கள் ராபின்சன், எமில்சிங், இம்மானுவேல், ஹரிஸ், பொன்ராஜ், ராபின் ஜெயப்பிரகாஷ், தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மறவன்மடம் சேகரத்தலைவர் கோயில்தாஸ், சபை ஊழியர் லாட்சன் சாமுவேல் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments