பொறையாரில் அதிமுக, பாமகவினர் பலர் திமுகவில் இணைந்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பிள்ளை பெருமாநல்லூர் மற்றும் சிங்க நோடை பகுதிகளை சேர்ந்த அதிமுக மற்றும் பாமக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் பொறையாரில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் இல்லத்தில் அவர் தலைமையில் திமுகவில் இணைந்தனர் திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திமுக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் திமுகவில் இணைந்த அனைவருக்கும் திமுக சார்பில் கட்சி சால்வை அணிவித்து வேட்டி, புடவை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பேசிய திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தங்கள் கட்சியில் இணைந்தவர்கள் அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் உறுதுணையாக இருப்போம் என்றும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
No comments