புதுச்சேரி அருகே ஓசியில் மதுபானம் தர மறுத்த காசாளரை கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா கீழ்கொத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜராம் (வயது 50) இவர் புதுவை சேதராப்பட்டு பாண்டி-மயிலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபானக்கடையில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை சுமார் 10.20 மணியளவில் மதுபானக்கடைக்கு வானூர் இரும்பை போஸ்ட் அகரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் சுதாகர் (வயது 37) என்பவர் வந்துள்ளார். அவர் ராஜராமிடம் சென்று ஓசியில் சரக்கு கேட்டுள்ளார். ராஜாராம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சுதாகர், ராஜாராமை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராஜாராம் சேதராப்பட்டு போலீசில் புகார் அளித்தார். சேதராப்பட்டு உதவி ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தார். சுதாகர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
No comments