சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M.தண்டபாணி தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் கூட்ட அரங்கத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசியமக்கள் நீதிமன்றம் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வட்ட சட்டப்பணி குழுவின் தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான V.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசரும், தமிழ்நாடு சட்டப்பணிகள் குழு ஆணைய உறுப்பினருமான, நீதியரசர் M.தண்டபாணி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்து, பின்னர் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி , உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் மோட்டார் வாகன விபத்தால் பாதிக்கப்பட்ட வழக்கு சமரச லோக்காயது) பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு தொகைரூபாய் 2025000/- தொகைக்கான காசோலை வழங்கினார்.
இவ்விழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி முன்னிலை வகித்தனர்.
உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் தங்க.ரமேஷ் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் N.ஸ்ரீராம், மூத்த வழக்கறிஞர் பொன்.ராவணன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழா முடிவில் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1. V.கோமதி நன்றியுரை ஆற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் இளமுருகன், உளுந்தூர்பேட்டை சங்கத்தின் மூத்த வழக்கறிஞர்கள் தாஸ், அன்பழகன், பக்கிரிசாமி, கண்ணையன், மோகன்ராஜ், தண்டபாணி,
கிருபாபுரி, காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், வழக்கறிஞர் சங்க பொருளாளர் மணிகண்டன், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடேசன், மகாலிங்கம், செல்வராஜ், ஆறுமுகம், செயலாளர் கந்தராஜ் , பெண் வழக்கறிஞர்கள்,மற்றும் வழக்கறிஞர்கள் சசிக்குமார், அரிகோவிந்தன், ஸ்ரீதர், சுரேஷ், சீனுவாசன் ,சக்திவேல், சுந்தர், இளஞ்செழியன், ஆனந்த்,
அயன்வேலூர் வெ.ஆ.முருகன் மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வழக்கறிஞர் பெருமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதிகள் என திரளாக கலந்து கொண்டனர்.
No comments