விநாயகம்பட்டு மற்றும் வம்புபட்டு பகுதியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தொடங்கி வைத்தார்.
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வம்புபட்டு மற்றும் விநாயகம்பட்டு பகுதியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு விநாயகம்பட்டு கிராமத்தில் புதியதாக 200 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றி ரூபாய் 13 லட்சத்து 87 ஆயிரத்து 624 ரூபாய் மதிப்பீட்டிலும், விநாயகம்பட்டு கிராமத்தில் கேயல் கேர் செல்வதற்காக மின் கம்பங்களை 30 அடி கம்மங்களாக உயர்த்தி மாற்றுவதற்கு ரூபாய் 4 லட்சத்து 20 ஆயிரத்து 951 மதிப்பீட்டிலும், மற்றும் வம்புபட்டு கிராமத்தில் செல்வா நகரில் புதியதாக 3பேஸ் எல்டி லைன் அமைத்தல் பணிக்காக ரூபாய் 4 லட்சத்து 9 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டிலுமான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
மொத்தம் 22,18,385 ரூபாய் மதிப்பீட்டான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள், திருபுவனை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், வாதானூர் இளநிலை பொறியாளர் கூடுதல் பொறுப்பு பழனனிவேல், வாதானூர் பிரிவு மின் ஊழியர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments