கலால்துறை துணை ஆணையரை கண்டித்து சாராயக்கடை உரிமையாளர் கையில் விஷ பாட்டிலுடன் முற்றுகை..
புதுச்சேரி உருளையன்பேட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன், இவர் கரையாம்புத்தூர், ஆராய்ச்சி குப்பம், கல்மண்டபம், மற்றும் வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.சாராய கடை நடத்துவதற்காக இவர் ஒரு கோடியே 75 லட்சம் வைப்புத் தொகையும், 2 கோடி ரூபாய்க்கு சொத்து பத்திரங்கள் கொடுத்தும் கடை நடத்தி வருகிறார்.மேலும் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கலால் துறைக்கு ஜனார்த்தனன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி உள்ளது.
இதனை செலுத்துவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் உள்ள நிலையில் கலால்துறை துனை ஆணையர் பிரான்சிஸ் மேத்யூஸ் 20% குறைத்து சாராயக்கடைகளை ஏலம் விட்டுள்ளார்.இதனை கண்டித்து இன்று கையில் மருந்து பாட்டிலுடன் கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சாராயக்கடை உரிமையாளர்கள் துணை ஆணையரை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாராயக்கடை உரிமையாளர்கள் கையில் இருந்த மருந்து பாட்டிலை பிடுங்கும்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து சாரய கடை உரிமையாளர் ஜனார்த்தனன் கூறும்போது...
கலால் துறைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிலுவை தொகை பாக்கியுள்ளது. இதனை செலுத்துவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் உள்ள நிலையில் இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் துணை ஆணையர் சாராயக்கடைகளை 20% குறைத்து ஏலம் விட்டுள்ளார். இதனால் தனக்கு 40 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் தான் மருந்து குடித்து சாவதற்காக இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
No comments