குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த மழைநீரை துரிதமாக செயல்பட்டு வெளியேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா..!!
புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக,
வில்லியனூர் தொகுதிகுட்பட்ட தட்டாஞ்சாவடி காந்திநகர், ரங்கசாமி நகர் பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா கவனத்திற்கு கொண்டு சென்றனர். உடனே அப்பகுதிக்கு நேரில் சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா , நேரடியாக பார்வையிட்டு மழை நீரை ஜே.சி.பி இயந்திரம்கொண்டு வெளியேற்ற ஏற்பாடு செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன் மற்றும் சேகர், ரவி, முத்து, முருகன், கார்த்திகேயன், கோதண்டம், அன்பு, நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
No comments