புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன்வளத்துறையின் இணையதள செயலி "EFFORTS”-ஐ அறிமுகப்படுத்தும் விழா..
புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன்வளத்துறையின் இணையதள செயலி "EFFORTS”-ஐ அறிமுகப்படுத்தும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை செயலர் A. நெடுஞ்செழியன், இ..ஆ..ப.,வரவேற்புரை நிகழ்த்தினார். துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன், இ.ஆ.ப. (ஓய்வு) கலந்து கொண்டு மீன்வளத்துறையின் இணையதள செயலியான "EFFORTS" -ஐ அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமி தலைமையுரையாற்றி கீழ்காணும் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நல திட்ட உதவிகளை மீனவர்களுக்கு வழங்கினார்.
மத்திய அரசு திட்டம் ("பிரதான் மந்திரி மட்சய சம்பட யோஜனா'')
அ) "வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல்" திட்டத்தின் கீழ் 25782 மீனவ பயனாளிக்கு அவரது பங்குத் தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.11.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆ). ஏனாம் பகுதியைச்சேர்ந்த ஒரு பயனாளிக்கு, தற்போதுள்ள குளிர்பதன மற்றும் பனிக்கட்டி உற்பத்தி நிலையத்தை நவீன படுத்துவதற்காக வேண்டி மானியமாக ரூ.29,77,939/- வழங்கப்பட்டது.
இ). புதியதாக நன்னீர் மீன்வளர்ப்பு குட்டைகள் அமைப்பதற்க்கும் மற்றும் இடுபொருள் மானியமாகவும் புதுவை பகுதியை சேர்ந்த நான்கு பயனாளிகளுக்கு ரூ.4,31,000/- வழங்கப்பட்டது.
ஈ). புதியதாக உவர்நீர் மீன்வளர்ப்பு குட்டைகள் அமைப்பதற்க்கும் மற்றும் இடுபொருள் மானியமாகவும் காரைக்கால் பகுதியை சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு ரூ.24,20,800/- வழங்கப்பட்டது.
உ). புதியதாக "மீன் உணவு மதிப்பு கூட்டு நிறுவனம்" (Fish Value Added Enterprise) துவங்குவதற்கு ஏனாம் பகுதியை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.23,33,030/- மானியமாக வழங்கப்பட்டது.
மாநில அரசு திட்டம்:
அ). 2024ஆம் ஆண்டு 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் 60% சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற புதுவை பகுதியை சேர்ந்த 511 மீனவ மாணவர்களுக்கு ரொக்க பரிசாக ரூ.48,59,000/- வழங்கப்பட்டது.
ஆ). இறந்த மீனவ ஓய்வுதியதாரர்களின் ஈமச்சடங்கு செலவுக்கான நிதியாக நபர் ஒருவருக்கு ரூ.15,000/- வீதம் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 295 பயனாளிகளுக்கு ரூ.44,25,000/- வழங்கப்பட்டு வருகிறது.
இ). காரைக்கால் பகுதியை சேர்ந்த 248 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக ரூ.1,36,67, 905/- வழங்கப்பட்டது.
ஈ). புதுச்சேரி பகுதியை சேர்ந்த 31 விசைப்படகு உரிமையாளர்களுக்கு காப்பீட்டு மானியமாக ரூ.96,022 வழங்கப்பட்டது.
சட்டப்பேரவை தலைவர் R. செல்வம், உள்துறை அமைச்சர் A. நமச்சிவாயம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் K. லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் P.M.L. கல்யாணசுந்தரம், R. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி மற்றும் பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக, மீன்வளத்துறை இயக்குநர், A. முகமது இஸ்மாயில், நன்றியுரை நிகழ்த்தினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மீன்வளத்துறை இணை இயக்குநர் கு. தெய்வசிகாமணி தலைமையில் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
No comments