சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த கூகையூர் பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கூகையூர் கிராமத்தின் ,சின்னசேலம் பெரம்பலூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளான செல்லியம்மன் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருவதாகவும், பிரதான சாலையில் இருந்து செல்லியம்மன் செல்லும் சாலை அமைந்திருக்கும் ஓடை மற்றும் புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் அதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் எனவே எங்கள் நகரின் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மக்கள் சென்று வர ஏதுவாக இந்த சாலையை மறுசீரமைப்பு செய்தும், ஏற்கனவே உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 18.11.2024 அன்று ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் கடந்த 22.11.2024 அன்று சின்னசேலம் நில அளவையர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் அவர்கள் கோரிய நிலத்தை அளந்து காட்டியுள்ளனர். அப்போது அங்கே அளந்த போது தனிநபர் ஒருவர் அமைத்திருந்த மின்சார கம்பம் அவர்கள் கோரிய பொதுபாதையின் நடுவே வந்துள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றி நாங்கள் உபயோகிக்கும் வண்ணம் மின்கம்பத்தை அகற்றிடவும், பாதை நடுவே உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றிடவும் வேண்டி இன்று 11.12.2024 சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட வந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments