Breaking News

தூத்துக்குடியில் 3ஆவது முறையாக கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி.!

 


தூத்துக்குடியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி தொடங்கியது.

தூத்துக்குடி மக்களின் விருப்பத்திற்கிணங்க 3ஆவது முறையாக கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி-பாளை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் நடைபெறும் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சியினை அதன் உரிமையாளர் நவ்ஷாத் மற்றும் மேலாளர் பினிஷ் மேத்யூ ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த விற்பனை கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. புகழ் பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும் டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும் தேக்குமர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை, டீப்பாய்கள், திவான் செட் ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும் என அதன் நிறுவனர் நவ்ஷாத் தெரிவித்தார். பர்னிச்சர் கண்காட்சி டிசம்பர் 28 முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை நடைபெறும் என அதன் மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!