*ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி கோவிலில் கார்த்திகை அமாவாசை பெருந்திருவிழா
திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு சைதன்யபுரியில் ஸ்ரீ மகா ப்ரத்யங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.அதன்படி கார்த்திகை மாத அமாவாசையான சனிக்கிழமை மாலை ஸ்ரீ ஜெகத்குரு ஆத்ம சைதன்ய சுவாமி தலைமையில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
மேலும் பில்லி, சூனியம், கடன் ,நோய், தொல்லைகளில் இருந்து முழுவதும் விடுபட அமாவாசை நடுநிசி மிளகாய் வத்தல் வேள்வி நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மாரியப்பன் மற்றும் பக்தர்கள் பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
செல்: 7339011001
No comments